அமெரிக்காவில் பெண் ஒருவர், தான் ஆவிகளுடன் பேசுவதாகவும், நடப்பதை முன்கூட்டியே அறியும் சக்தி தனக்கு உள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
அமெரிக்காவை சேர்ந்த சாலி குட்மோர் என்ற செவிலியர் பெண், தான் சிறு வயதிலிருந்தே ஆவிகளை கண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் நிறங்கள் மற்றும் அடையாளங்களை கண்டு வருங்காலத்தை முன்கூட்டியே உணர முடிவதாகவும் கூறியுள்ளார்.
இவர் தனது மகளின் வயிற்றின் அருகே சிவப்பு நிறத்தினை கண்டதாகவும் அதையடுத்து மகளுக்கு ஏதோ பிரச்சனை வரப்போவதாக உணர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சோதித்த மருத்துவர்கள் அவரது மகள் சோபியாவின் கர்ப்பப்பையில் கட்டி உள்ளதை கண்டறிந்துள்ளனர். பின்பு சிகிச்சை மூலம் சோபியாவின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
மேலும் சாலி இதுபற்றி கூறுகையில், நான் இதுபோல பொலிசாருக்கும், மற்ற நபர்களுக்கும் பல முறை உதவியுள்ளேன் என்றும் என் சக்தியால் தான் எனது மகளின் உயிரை காப்பாற்ற முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.