லண்டன் ஈலிங் அம்மன் கோவிலுக்குள் சென்று, பூசை முடியுமுன்னரே பிரசாதத்தை கேட்ட நபர் ஒருவர் மீது கோவில் பூசாரி மற்றும் தர்ம கர்த்தா ஆகியோர் தாக்குதல் நடத்தினார்கள் என்ற செய்தியை பல ஊடகங்கள் முன்னர் வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த நபர் மதுபோதையில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரை தாக்கி பின்னர் அவரைக் கொண்டுவந்து வெளியே போட்டுள்ளார்கள். இதுதொடர்பாக அருகில் இருந்த வெள்ளை இன பெண் ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுக்கவே, அவர்கள் விரைந்து வந்து தாக்கப்பட்ட தமிழரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்கள். என்ன நடந்தது என்று அறிய கோவிலுக்கு உள்ளே மற்றும் வெளியே உள்ள CCT V கமராக்களை பார்க பொலிசார் முனைந்தவேளை அது அழிக்கப்பட்டு இருந்துள்ளது.
இதனால் பொலிசார் 2 மீது வழக்குதொடுத்தார்கள். இந்த வழக்கு பல மாதங்களாக நடைபெற்று வந்தது. இன் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 வருக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இனி எந்த ஒரு பிரச்சனையிலும் அவ்விருவரும் தலையிட்டால், அவர்கள் கைதாகி சிறைசெல்லவேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இதேவேளை இந்த வழக்கின் முடிவு குறித்து கருத்துக் கேட்க்க அதிர்வின் நிருபர் ஈலிங் அம்மன் கோவில் முக்கியஸ்தர் யோகநாதனை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். நடந்த இந்தப் பிரச்சனையை அப்படியே விட்டுவிடவேண்டும் என்றும், இது ஒரு கசப்பான அனுபவம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக எந்தச் செய்தியையும் வெளியிடவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.