
வெளிநாட்டினர் அதிகம் கூடும்,கோவா,பெங்களூரு உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஒரே சமயத்திலோ, அடுத்தடுத்தோ மிகப் பெரியத் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது என்று சவுத்ரி கூறியுள்ளார். இது கடந்த 2011ம் ஆண்டு மும்பையில் நடைப்பெற்றத் தாக்குதலை விட மிக கொடூரமாக இருக்க வேண்டும்,என்றும் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது என்று சவுத்ரிகூறியுள்ளார்.இந்தத் தாக்குதல் திட்டத்தை ஐஎஸ் ஐஎஸ் , இந்தியன் முஜாகிதீனுடன் சேர்ந்து நடத்த அல்கொய்தா இயக்கம் திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ள சவுத்ரி, தேசிய பாதுகாப்புப் படை மிகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு பாதுகாப்பு நடபடிகைகளை மேற்கொண்டு வருகிறது என்றும், மாநில காவல்துறையினரும் இந்த கண்காணிப்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.