சுவிட்சர்லாந்தில் நபர் ஒருவர் தனது பெற்றோரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸின் சூரிச் மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் 30 வயது நபர் ஒருவர் தனது தந்தை மற்றும் தாயாரை குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
கொலைக்கான காரணம் மற்றும் எந்த தகவலையும் பொலிசார் இதுவரை வெளியிடாததால் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
அந்த குடியிருப்பில் இருந்து அந்த நபரின் 65 வயது தந்தை மற்றும் 66 வயது தாயாரின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளதோடு அந்த நபரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் தற்போது தீவிர விசாரணையில் பொலிசார் ஈடுபட்டுள்ளதால் விசாரணை முடிந்த பின் கொலைக்கான காரணம் பற்றிய தகவலை பொலிசார் தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.