உலகின் அதிகளவான பயனர்களை கவர்ந்துள்ள கூகுள் நிறுவனம் அதனைத் தாண்டியும் பல்வேறு துறைகளில் வியாபித்து நிற்கின்றது.
இதன் மற்றுமொரு அங்கமாக மருத்துவத்துறையில் புதிய முயற்சி ஒன்றினை மேற்கொள்ளுகின்றது.
இதன்படி நோய்கள் தொடர்பாக பயனர்கள் கூகுள் தளத்தில் தேடும் போது அந்நோய் தொடர்பாக சந்தேகங்களை தீர்ப்பதற்கு வைத்தியர் ஒருவருடன் வீடியோ அழைப்பின் ஊடாக உரையாடக்கூடிய வசதியினை ஏற்படுத்தவுள்ளது.
Google Hangouts இனூடாக குறித்த வீடியோ அழைப்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் இந்த முயற்சிக்கான சோதனைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.