முதல் உலகப் போரில் இறந்துபோன பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் படுக்கை அறை 96 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
பிரான்ஸை சேர்ந்த ஹுமர்ட் என்ற ராணுவ வீரர் முதல் உலகப்போரின் போது பெல்ஜியத்தில் 1918ம் ஆண்டு சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதையடுத்து அந்த வீரரின் பெற்றோர் அவருடைய படுக்கை அறையை கோவில் போல் பாதுகாத்து வந்துள்ளனர்.
பின்னர் 1936ம் ஆண்டு தங்கள் வீட்டை விற்ற போது கூட தங்கள் மகனின் படுக்கை அறையை இன்னும் 500 ஆண்டுகளுக்கு எந்தவித மாற்றமும் செய்யாமல் பாதுகாக்க வேண்டுமென்று நிர்ணயித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த படுக்கையறை 96 வருடங்களாக அதே நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அந்த அறையின் மேஜையில் இருக்கும் சிகிரெட்லிருந்து கரையன் படிந்த ஆடைகள் வரை எதுவும் இருந்த இடத்தை விட்டு மாற்றப்படவில்லை என்பது அனைவரையும் ஆச்சரித்தில் ஆழ்த்துயுள்ளது.
இதுகுறித்து வீட்டின் தற்போதைய உரிமையாளர் கூறுகையில், இது அந்த ராணுவ வீரருக்கு செய்யும் மரியாதை என்றும், இதனை அருங்காட்சியகம் போல் பாதுகாக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.