நோர்வேயின் 19 நாடுகளில் தொடர்ந்து 5 மாதங்களாக 15 000 Km தூரத்துக்கு மேற்கொள்ளப் பட்ட சாதனைப் பயணத்தின்
போது எடுக்கப் பட்ட டைம்ஸ் லேப் (time-lapse) வீடியோவாகும். இதில் சுமார் 10 000 இற்கும் அதிகமான புகைப்படங்களின் தொகுப்பு உள்ளது. இப் புகைப் படங்கள் நோர்வே ரஷ்யாவின் அதிதொலைவிலுள்ள தெற்கு எல்லையில் இருந்து வடகிழக்கிலுள்ள ரஷ்ய எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பிரதேசங்களில் எடுக்கப் பட்டவையாகும்.
5 நிமிட நேர இலக்குடன் தயாரிக்கப் பட்ட இக்குறும்பட வடிவிலான டைம்ஸ் லேப் வீடியோ நோர்வேயின் பன்முகத் தன்மை, தென்மேற்கே உள்ள ஆழமான கடற் கழிமுகங்களில் இருந்து வடக்கே உள்ள சந்திர வடிவிலான இயற்கை வனப்பு நிலம் வரை அனைத்தையும் சித்தரிக்கின்றது.
மேலும் Aurora Borealis எனப்படும் துருவ ஒளி, குளிர்காலம் மற்றும் கோடைக் காலம் என இரு வேளைகளிலும் நகரக் கட்டமைப்புக்கள் எவ்வாறு அழகு பொருந்தியதாக விளங்குகின்றன என்பவற்றையும் படம் பிடிக்கத் தவற விடவில்லை இந்த டைம்ஸ் லேப் வீடியோ. இவ்வீடியோவில் நோர்வேயிலுள்ள கண்கவர் பிரதேசங்களின் இயற்கை அழகு பொருந்திய புகைப்படங்களும் பல உள்ளன. முக்கியமாக ofoten, Senja, Helgelandskysten, Geirangerfjorden, Nærøyfjorden மற்றும் Preikestolen ஆகிய இயற்கை வனப்புப் பிரதேசங்கள் இதில் உள்ளடக்கப் பட்டுள்ளன.
உங்கள் கணிணி மற்றும் இணைய வேகம் ஈடு கொடுக்குமானால் 2160 பிக்சலில் (4K) இந்த வீடியோவை பார்வையிடுங்கள்
5 நிமிடங்களில் நோர்வேயின் அழகு - வீடியோ
