சுவிஸ்சர்லாந்தில் 39 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த அமெரிக்க முதியவர் ஒருவருக்கு அவர் வாழ்ந்த பகுதி பற்றி அதிகம் தெரியவில்லை என்பதால் குடியுரிமை வழங்க மறுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 75 வயது பேராசிரியர் ஒருவர் சுவிஸ் மத்திய தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் கடந்த 1975ம் ஆண்டு முதல் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் சுவிஸில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் 39 வருடங்களாக சுவிஸில் வாழ்ந்து வந்தாலும் இவருக்கு தான் வசித்து வந்த பகுதியை பற்றி சரியாக தெரியாத காரணத்தால் குடியிரிமை வழங்க உள்ளூர் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், அந்த முதியவருக்கு தான் வசித்து வந்த பகுதியை சுற்றியுள்ள சிறு கிராமங்கள் பற்றிக்கூட கூற முடியவில்லை என்றும் உள்ளூர் அரசியல் பற்றி எதும் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது அந்த முதியவருக்கு சுவிஸ் குடியுரிமை கிடைக்காததால், குடியுரிமை விண்ணப்பித்தற்காக அவர் 3600 பிராங்குகள் நிர்வாக தொகையாக செலுத்த வெண்டும் என்பது குறிப்பிடத்தகக்து.