உக்ரைனின் எல்லைப்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பயணித்து பலியான பெண் ஒருவருக்கு முதுகலை பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த யூலை மாதம் 17ம் திகதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போயிங் 777 விமானம், ரஷ்ய கிளர்ச்சியாளர்களால் சுடப்பட்டதால், விமானத்தில் பயணித்த 293 பேரும் பலியாகியுள்ளனர்.
அந்த விமானத்தில் சென்று பலியானவர்களில் மலேசியாவைச் சேர்ந்த எலிசபெத் லியே டி (Elizabeth liye D) என்பவரும் ஒருவர் ஆவர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் எலிசபெத் பயின்ற மலயா பல்கலைக்கழகத்தின் (Malaya University) பட்டமளிப்பு விழாவில், அவருக்கு வணிக நிர்வாக முதுகலை பட்டம் (MBA) வழங்கப்பட்டுள்ளது.
எலிசபெத் பட்டத்தை பெற இன்னும் ஓராண்டு படிக்க வேண்டியுள்ளது என்றாலும் இறந்த அவருக்கு ஆருதல் அளிக்கும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகம் பட்டம் அளித்துள்ளது.
இந்த பட்டத்தை அவரது சகோதரியிடம் அந்த பல்கலைக்கழகம் சமர்பித்துள்ளது. மேலும் இந்த பல்கலைக்கழகத்தின் முறைப்படி மாணவ, மாணவியர் யாராவது படிக்கையில் இறந்துவிட்டால் அவருக்கு பட்டம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டத்தை பல்கலைக்கழக நிர்வாகம் கண்ணீருடன் தந்ததாக கூறப்படுகிறது.