பிரான்சில் விண்டர் சாகச கலைகளை கற்றுக்கொடுப்பதில் 103 வயதான மூதாட்டி ஈடுபட்டுள்ளார்.
162 வருடங்கள் பழைமை வாய்ந்த விண்டர் சாகசகலையில் ரோசா போக்லைன் பெயர் பெற்றிருந்தார். இன்றும் தனது 103-வது வயதில் சாகச நிகழ்வுகளை அசை போடுகிறார்.
1910-ல் பிறந்து தனது வாழ்வின் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து வரும் இவருக்கு 53 பேரக் குழுந்தைகள் உள்ளனர்.
நினைவுகளை அசை போடும் போது எதையும் மறக்காமல் இருக்க தனது 80 வயதான இளைய மகனை தன்னுடனேயே வைத்திருந்தார்.
103 வயதான போதிலும் தாம் விரும்பி செய்யும் சர்க்கஸ் நிலை பற்றி கூறும் போது கண்களில் அவருக்கு இன்னும் அதே உத்வேகம் தெரிகிறது.
பட்டாம் பூச்சி போல் வட்டமிட்டு திரிந்த ரோசா, சர்க்கஸ் முதலாளியை மணந்தார். வித்தியாசமான முறையில் அவரின் திருமணம் தேவாலயத்திற்கு பதிலாக புலியின் கூண்டில் நடைபெற்றதாக அவர் கூறினார்.
விலங்குகளுடன் மேற்கொள்ளும் சாகச நிகழ்வின் போது தமது கணவர் புலிகளால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்தாக கூறும் அவர் இருந்த போதும் இறுதி வ¬ரை அவரது சேவையை ஆர்வத்துடன் செய்ததாக கூறினார்.
பல கொடிய விலங்குகளுடன் பாச பினைப்பை ஏற்படுத்தி கொண்ட அவர் இன்றளவில் சர்க்கஸ் ரிகஸ்சர்களில் ஆர்வத்துடன் பங்கெடுத்து பிறருக்கு கற்று தருவதாக பெருமிதத்துடன் கூறுகிறார்.
103 வயதிலும் சாகசம் செய்யும் பாட்டி
