மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் தமிழர் குடும்பமே பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உக்ரைனில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பேர் பரிதாபமாக பலியாகினர். இதில் ஒரு தமிழர் குடும்பமும் அடங்கும்.
மலேசியாவில் உள்ள ‘ஷெல்’ நிறுவனத்தில் ஆசிய பசிபிக் பிரிவின் தலைவராகவும், ஐ.டி. பட்டதாரிகளின் ஆலோசகராகவும் பணியாற்றி வந்தவர் பால் ராஜ சிங்கம் சிவஞானம். இவர் தனது மனைவி, மகனுடன் நெதர்லாந்து சென்றிருந்தார்.
நெதர்லாந்தில் பயணத்தை முடித்துக்கொண்டு இவர் குடும்பத்துடன் கோலாலம்பூர் வந்தபோது தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதில் பால் ராஜ சிங்கம் சிவஞானம் குடும்பமே பலியாகி விட்டது.
அதே போல் பால் ராஜ சிங்கம் சிவஞானம் பணியாற்றி வந்த அதே ‘ஷெல்’ நிறுவனத்தில் கஜகஸ்தானில் பணியாற்றி வந்தவர் தம்பி ஜீ. இவர் கஜகஸ்தானில் இருந்து கோலாலம்பூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய பணியிடத்தில் சேருவதற்கு முன் அவர் குடும்பத்துடன் ரம்ஜான் கொண்டாட்டத்துக்காக வந்துகொண்டிருந்தார். அப்படி வரும்போது தான் தனது மனைவி அரிஜா காஜலீ, குழந்தைகள் முகமது ஆரிப், முகமது அப்சல், மார்ஷா அஜ்மீனா, முகமது அப்ரஸ் ஆகியோருடன் பலியாகி விட்டார்.
Home
»
India
»
Indian_news
»
World_news
»
இந்தியா செய்திகள்
» சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்: தமிழர் குடும்பமே பலியான பரிதாபம்
Tagged with: India Indian_news World_news இந்தியா செய்திகள்
About Unknown
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.