மலேசியன் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் புதிய திருப்பம்
கடந்த வியாழக்கிழமை நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு தாக்கப்பட்டது. இதில் பயணம் செய்து கொண்டு இருந்த 298 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி கட்டைகளாக இருந்தனர். இந்த தாக்குதல் உக்ரைன் பகுதியில் நடந்தது. இதற்கு காரணமானவர்கள் யார் என்று தெரியவில்லை. இதனை செய்ததாக உக்ரைன் அரசும் ரஷிய அரசும் மாற்றி மற்றி குற்றம்சாட்டி வருகிறார்கள்.
உக்ரைனில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகனையை பயன்படுத்தும் அளவுக்கு பயிற்சி கிடையாது. எனவே இதனை செய்தது ரஷிய அரசு தான் என்கிறது உக்ரைன் அரசு. ஆனால் உக்ரைன் அரசு எல்லாத்தையும் செய்து விட்டு தேவையில்லாமல் தங்கள் மீது அபண்டமாக பழி போடுவதாக ரஷிய அரசு உக்ரைன் மீது குற்றம்சாட்டி உள்ளது. இப்படி ஒருவரை ஒருவர் மாற்றி மற்றி குற்றம்சாட்டி வருவதால் செய்தவர் யார் என்று தெரியவில்லை.
இந்நிலையில் பல நாட்டு தலைவர்களின் கோரிக்கையின் பேரில் இது குறித்து விசாரிக்க சர்வதேச விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. மலேசியா , நெதர்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் சேர்ந்து இந்த குழுவை அமைத்து உள்ளார்கள். ஆனால் விபத்து பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுபாட்டில் உள்ளதால், விசாரணை குழு அங்கு சென்றால் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட மாட்டாது என உக்ரைன் அரசு தெரிவித்து உள்ளது. இதில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என உக்ரைன் அரசிடம் மலேசிய அரசு கேட்டு உள்ளது.
