1 ) காமன்வெல்த் இன்று ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் தொடங்க உள்ளது . 12 நாட்கள் நடக்க உள்ள இந்த போட்டிகள் ஆகஸ்ட் - 3 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
2 ) இந்த போட்டிகளில் 4,100 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர் . 2010 ஆம் ஆண்டு டில்லியில் நடந்த போட்டிகளில் 6,081 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் .
3 ) காமன்வெல்த் போட்டி தான் ஸ்காட்லாந்தின் நடைபெற உள்ள முதல் பெரிய விளையாட்டு போட்டி .
4 ) இந்த காமன்வெல்த் போட்டியின் மோட்டோ , " மக்கள் , இடம் , உணர்வு "
5 ) காமன்வெல்த்தில் மொத்தம் 17 விளையாட்டுகள் உள்ளன . அதில் 261 போட்டிகள் நடைபெறும் .
6 ) இன்று கிளாஸ்கோவின் செல்டிக் பார்க் என்னும் இடத்தில் துவக்க விழா நடைபெற உள்ளது . துவக்க விழாவில் இந்தியக் கொடியை ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற விஜய் குமார் ஏந்திச் செல்ல உள்ளார் .
7 ) இந்த காமன்வெல்த் போட்டிகளின் லோகோவின் பெயர் கிளைட் . இந்த லோகோவினை ஒரு 12 வயது சிறுவன் வடிவமைத்துள்ளான் .