Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

விஜயகாந்த் தமது மூத்த மகனை நடிக்க வைத்து ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வருகிறார். கட்சிப் பணிகளுக்கு இடையே படத்தயாரிப்பிலும் மிக மும்முரமாக இறங்கியுள்ள விஜயகாந்த், தமது மகன் நடிக்கும் படத்துக்கு யுவன்தான் இசையமைக்க வேண்டும் என்று அன்புக்கட்டளை இட்டாராம்.
கேப்டனின் அன்புக்கட்டளையை ஏற்றுக்கொண்ட யுவன் அதற்கான வேலைகளில் மும்முரமாக தற்போது இறங்கியுள்ளார். படத்தில் ஒரு பெப்பி சாங் இடம்பெற உள்ளதாம். அதற்கு சரியான குரல் சிம்புவுடையதுதான் என்று யுவன் முடிவெடுத்து சிம்புவை அணுகினாராம். இதுக்கெல்லாம் கேக்கணுமா, வான்னு சொன்னா வரமாட்டேனான்னு சிம்பு கூற நெகிழ்ச்சி அடைந்துவிட்டாராம் யுவன் ஷங்கர் ராஜா.
அத்துடன் யுவன் ஸ்டைல் பாடல்களை வாயை மூடியும், மூடாமலும் அப்படியே பின்பற்றிப் பாடுவதில் வல்லவர் சிம்புதான் என்று, ராஜாவின் மகன் யுவனுக்கு தெரியாதா என்ன? வாயை மூடியும் மூடாமலும் பாடுவதில் யுவன் வல்லவர் என்றால். அப்படிப் பேசுவதில் சிம்பு வல்லவர் என்பதால், பாடுவதில் சிம்புவுக்கு பெரிதாக சிரமம் இருக்கப் போவதில்லை. யுவன் ஸ்டைலில்
பாடப்படும் பாடல் ஒன்று சிம்புவின் குரலில் வரவுள்ளது என்பதுதான் சிம்புவுக்கு யுவன் அழைப்பு விடுத்ததன் உண்மை காரணம்
நடிகை ரம்யா பற்றிய தகவல்கள் எதுவும் கடந்த 2 மாத காலமாக வெளிவராததால் அவரை காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் படங்களிலும், கன்னடத்திலும் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரம்யா, கர்நாடக அரசியலிலும் குதித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவருக்கு இளைஞர் காங்கிரசில் பொறுப்பு வழங்கப்பட்டது.
மாண்டியா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். ஆறு மாதங்களுக்கு பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்த தோல்வியால் மனம் உடைந்தார். அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.
ஆர்யன் என்ற கன்னட படத்தில் மட்டும் நடித்தார். அப்படம் வெளியாகிவிட்டது. அடுத்து புனித் ராஜ்குமார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார்.
பிறகு தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் அந்த படத்தில் இருந்து வெளியேறினார், அதன் பிறகுதான் அவரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டுவிட்டரில் அடிக்கடி கருத்துக்களை பதிவு செய்வது வழக்கம். கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து டுவிட்டரிலும் அவர் வரவில்லை.
அரசியல் நிகழ்ச்சிகள், சினிமா விழாக்கள் போன்றவற்றிலும் பங்கேற்கவில்லை. வீட்டிலும் அவர் இல்லை என்கிறார்கள். ரம்யா எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது மர்மமாக இருக்கிறது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் வல்லூறு ஒன்றை 315,000 சவூதி றியால்களுக்கு (சுமார் ஒரு கோடியே 9.5 லட்சம் இலங்கை ரூபா) விலைக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார். வல்லூறுகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவராக அறியப்பட்ட சாத் அல் ஷலீக்கி என்பவரே இவ்வளவு பெருந்தொகைக்கு இப்பறவையை வாங்கினார் என சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. வல்லூறு வர்த்தகத்தில் ஈடுபடும் உள்ளூரைச் சேர்ந்த இருவரால் இப்பறவை பிடிக்கப்பட்டு சில மணித்தியாலங்களில் அதை சாட் அல் ஷலீக்கி 315,000 றியால்களுக்கு வாங்கினார் எனவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

பிரேசிலில் 39 பேரை படுகொலை செய்த இளைஞன் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த நான்கு வருடங்களில் தொடர்ச்சியாக 39 கொலைகளை செய்துள்ளார். அதில் 16 இளம்பெண்களும் அடங்கும்.
இதுகுறித்து பிரேசில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்து வெளியிடுகையில்,
சில கொலைகள் குறித்து கடந்த 70 நாட்களாக நடத்திய புலன் விசாரணையையடுத்து, தியாகோ ஹென்ரிகே கோமெஸ் டா ரோஷா (26) என்ற இளைஞரை கோயியானியா நகரில் வைத்து கைது செய்தோம்.
காவலாளியாகப் பணியாற்றி வந்த அவர், 2011-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 39 பேரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
கொல்லப்பட்டவர்களில் 16 இளம் பெண்களும், ஓரினச் சேர்க்கையாளர்கள், தெருக்களில் வசிப்போர் ஆகியோரும் அடங்குவர்.
அவர்கள் அனைவரும் தனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் எனவும், தனக்குள் அவ்வப்போது எழும் கோபம் காரணமாக இந்த கொலை  செய்ததாக தெரிவித்துள்ளார்.
அவர்களை கொலை செய்ததன் மூலம் கோபம் தணித்து கொண்டதாக தியோகோ ஹென்ரிகே எங்களிடம் கூறினார்.
ஒவ்வொரு கொலைக்குப் பிறகும் குற்ற உணர்ச்சி ஏற்பட்டதாகவும், பிறகு அதே குற்ற உணர்ச்சி கோபமாக மாறி மற்றொரு கொலைக்குக் காரணமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
கைதுக்குப் பின், சிறையிலுள்ள மின்விளக்கை உடைத்து, தனது மணிக்கட்டை கிழித்துக் கொண்டு தியோகோ ஹென்ரிகே தற்கொலைக்கு முயன்றார்.
எனினும் பாதுகாவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தியோகோ தங்கியிருந்த இடத்திலிருந்து ஒரு கைத்துப்பாக்கி, ஒரு மோட்டார் சைக்கிள், திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடுகள் ஆகிவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மூளை காய்ச்சலால் உயிருக்கு போராடும் சிறுமியின் கடைசி ஆசையை நடிகர் பவன்கல்யாண் நிறைவேற்றியுள்ளார். ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் பால் வாஞ்சா கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் நாகையா– நாகமணி. இவர்களது 2–வது மகள் ஸ்ரீஜா (12). ஸ்ரீஜா கடந்த 15ம் திகதி மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார், இதையடுத்து கம்மம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால், பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஸ்ரீஜா, நடிகர் பவன்கல்யாணின் தீவிர ரசிகை, அவர் நடித்த கப்பர் சிங் படத்தை பார்த்து பவன்கல்யாணை கப்பர் சிங் என்றே அழைத்து வந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவதற்கு முன்பு பவன்கல்யாணை பார்க்க வேண்டும் என்று தனது தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால் மரண படுக்கையில் இருக்கும் ஸ்ரீஜாவின் ஆசை நிறைவேறாமல் போய் விட்டதே என்று அவரது தந்தை கதறி அழுதார். இதனை தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அறிந்த நடிகர் பவன்கல்யாண், ஸ்ரீஜா சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனைக்கு சென்று அவரை சந்தித்துள்ளார். கோமா நிலையில் இருந்த ஸ்ரீஜா பவன் கல்யாண் வந்ததை உணர முடியவில்லை. ஸ்ரீஜாவின் அருகில் அமர்ந்த பவன்கல்யாண் அவளது கையை பிடித்து வருடிய படி காது அருகில் குனிந்து ஸ்ரீஜா நான் பவன்கல்யாண் வந்து இருக்கிறேன் என்று மெல்லிய குரலில் கூறியுள்ளார். உடன் இருந்த ஸ்ரீஜாவின் தந்தை நாகையாவும், ஸ்ரீஜா உனது கப்பர்சிங் வந்து உள்ளார். கண் திறந்து பாரேன் என்று கதறியபடி கூறியுள்ளார். ஆனாலும் ஸ்ரீஜாவிடம் எந்த உணர்ச்சியும் ஏற்படவில்லை. பெற்றோர்கள் கதறி அழுததை கண்டு பவன் கல்யாண் கண் கலங்கினார். ஸ்ரீஜா குணமடைய வேண்டுதல் நடத்தி கொண்டு வந்த விநாயகர் சிலையை பரிசளித்தார். மேலும் அவளது சிகிச்சைக்கு உதவியாக ரூ.2 லட்சத்துக்கான காசோலையை அவளது தந்தையிடம் வழங்கியுள்ளார். நீண்ட நேரம் அங்கிருந்த பவன்கல்யாண் தான் வந்திருப்பதை ஸ்ரீஜா உணரவேண்டும் என்று பலவாறு முயற்சி செய்தார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் நபிகள் நாயகத்தை இழிவாக பேசியதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் நகரை சேர்ந்த ஆசியா பிப்பி (Asia Bibi Age-42) என்ற கிறிஸ்துவ பெண் கடந்த 2009ம் ஆண்டில் பழத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் இவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென இவருக்கு தாகம் ஏற்பட்டதால், உடன் வேலைப்பார்க்கும் இஸ்லாமிய பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண் கிறிஸ்துவர்கள் சுத்தமற்றவர் என கூறி, அவருக்கு தண்ணீர் தர மறுத்துள்ளார். இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 5 மணி நேரத்திலேயே பிப்பி நபிகள் நாயகத்தை இழிவாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சில இஸ்லாமிய நபர்கள் பிப்பியின் குடும்பத்தினரை கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் கடவுளை தகாத வார்த்தைகளால் திட்டியதாக வழக்கு பதிவு செய்து மரண தண்டனை விதிக்கப்பட்டது. கிறிஸ்துவ பெண் என்றதால் தான் பாகிஸ்தானில் அனுபவித்த கொடுமைகள் பற்றி விவரித்துள்ளார். இதற்கு இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது பிப்பியின் விடுதலைக்காக 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 400,000 நபர்கள் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.